சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் : பெண் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள சூழலில் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் : பெண் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

மேலும் சில மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Raipur:

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுக்மா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுக்மா மாவட்டத்தில் உள்ள புர்தபாரா கிராமத்தில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெயர் ஹேம்லா அயாதி என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

மேலும் சில மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.