சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் : 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

தெலங்கானா மாநில எல்லையை ஒட்டியுள்ள கிஸ்தாராம் என்ற இடத்தில் என்கவுன்ட்டர் நடந்துள்ளது

சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் : 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Raipur:

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கிஸ்தாராம் வனப்பகுதி தெலங்கானா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் போலீசார் 2 பேர் உயிரிழந்தனர். 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிஸ்தாராம் வனப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை இன்னமும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.