This Article is From Aug 27, 2019

பிரான்ஸ் அதிபரின் மனைவியே கேலி செய்த பிரேசில் அதிபர்- அமேசான் தீயைப் போல் பற்றியெரியும் பகை!

ஜி7 மாநாட்டிலும் அமேசான் தீ குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபரின் மனைவியே கேலி செய்த பிரேசில் அதிபர்- அமேசான் தீயைப் போல் பற்றியெரியும் பகை!

அமேசான் காட்டுத் தீ விவகாரம் உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார் மாக்ரன்.

ஹைலைட்ஸ்

  • மாக்ரன், போல்சனோராவின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார்
  • அமேசான் தீ விவகாரத்தில் இருவருக்கும் இடையில் கருத்து மோதல்
  • ஜி7 மாநாட்டிலும் அமேசான் விவகாரத்தை எழுப்பினார் அதிபர் மாக்ரன்
Biarritz:

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரன் மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு இடையில் உரசல் போக்கு அதிகரித்துள்ளது. அதன் உச்சமாக போல்சனாரோ, மாக்ரனின் மனைவியை கேலி செய்ய, அதற்குக் உஷ்ணமாகியுள்ளார் பிரான்ஸ் அதிபர். 

அமேசான் காட்டுத் தீ விவகாரம் உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார் மாக்ரன். குறிப்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேசப் பிரச்னையாகும். ஜி7 மாநாட்டில் அது தலையாயப் பிரச்னையாகக் கருதி விவாதிக்கப்பட வேண்டும்” என்று கருத்திட்டிருந்தார். அதற்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, “காலனியாதிக்க மனோபாவத்தைத்தான் இது காட்டுகிறது” என உஷ்ணமானார். 

ஜி7 மாநாட்டிலும் அமேசான் தீ குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. இதனால் கடும் டென்ஷனில் இருந்துள்ளார் போல்சனாரோ. இப்படிபட்ட நேரத்தில்தான் ஒருவர் ஃபேஸ்புக்கில், “இப்போது புரிகிறதா… ஏன் போல்சனாரோவை, மாக்ரன் வம்புக்கு இழுக்கிறார் என்று..?” என்று கூறி மாக்ரனின் 66 வயது மனைவியான பிரிகிட் மாக்ரனின் படத்தையும் போல்சனாரோவின் இளவயது மனைவியின் படத்தையும் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டில் போல்சனாரோ, “அவரை அசிங்கப்படுத்தாதீர்கள், ஹ ஹா” என கமென்ட் பதிவிட்டிருந்தார்.

இதனால் கடும் அப்செட்டான மாக்ரன், “என் மனைவி குறித்து மிகவும் கீழ்த்தரமான கமென்ட்களை சொல்லியிருக்கிறார் அவர். இது மிகவும் வருத்தமானதாகும். குறிப்பாக பிரேசிலின் குடிமக்களுக்கு. தங்கள் நாட்டு அதிபர் இப்படி கீழ்த்தரமான ஒரு விஷயத்தை செய்துள்ளாரே என்று அந்நாட்டுப் பெண்கள் அவமானப்படுவார்கள் என நினைக்கிறேன். பிரேசில் நாட்டு மக்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். அவர்களும், இதைப் பார்த்து அவமானப்படுவார்கள்.” என்று தனது ஆதகங்களைக் கொட்டியுள்ளார்.

அமேசான் காட்டுத் தீ விவகாரத்திலும் பிரேசில் அதிபர் போல்சனாரோ, “அமேசான் விவகாரத்தில் ஆர்வம் கொண்டிருப்பது போன்று அதிபர் மாக்ரன் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது மாக்ரனின் காலனி அல்ல. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு மரியாதை கொடுத்து அவர் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார். 
 

.