செவ்வாய் கிரகத்துக்கு சென்றுவர டிக்கெட் விலை இவ்வளவுதான் - ஆச்சர்யமூட்டும் எலான் மஸ்க்!

"செவ்வாய்க்கு சென்று திரும்ப ஒரு லட்சம் டாலர் போதும் என்ற நிலை கூட வரும்" என்று ட்விட்டரில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
செவ்வாய் கிரகத்துக்கு சென்றுவர டிக்கெட் விலை இவ்வளவுதான் - ஆச்சர்யமூட்டும் எலான் மஸ்க்!

"மக்கள் இங்குள்ள வீட்டை விற்றுவிட்டு செவ்வாயில் குடியேறும் காலமெல்லாம் வெகுதூரத்தில் இல்லை" எலான் மஸ்க்.


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன சிஇஓ எலான் மஸ்க் மற்ற கோள்களுக்கு பயணம் என்ற விஷயத்தில் தீர்மானமாக உள்ளார். அதற்காக அவர் எந்த ரகசியத்தையும் காப்பதில்லை. அடிக்கடி ட்விட்டரில் அப்டேட்டுகளையும், இது குறித்த உரையாடல்களையும் நிகழ்த்தி வருகிறார். அந்த வரிசையில் எலான் மஸ்க் செவ்வாய்க்கு சென்று வர எவ்வளவு செலவாகும் என்ற கேள்விக்கு பதிலளித்து அனைவரையும் வியப்படைய செய்துள்ளார். 

செவ்வாய்  மற்றும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஸ்பேஸ் எக்ஸிடம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. செவ்வாய்க்கு செல்ல எவ்வளவு செலவாகும் என்ற கேள்விக்கு. "அது எத்தனை பேர் செல்கிறார்கள் என்பதை பொறுத்து மாறுபடும்" என்றார்.

"இருந்தாலும் சராசரியாக செவ்வாய்க்கு செல்ல 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். அவ்வளவு ஏன் செவ்வாய்க்கு சென்று திரும்ப ஒரு லட்சம் டாலர் போதும் என்ற நிலை கூட வரும்" என்று கூறினார் எலான் மஸ்க்.

"இந்த கட்டணம் என்பது மிகவும் குறைவானது. அதற்கு இங்குள்ள வீட்டை விற்றுவிட்டு செவ்வாயில் குடியேறும் காலமெல்லாம் வெகுதூரத்தில் இல்லை" என்றார்.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதை கனவுத்திட்டமாக கொண்டிருந்தாலும், பூமிக்கு மாற்றாக மஸ்க் நிலவைதான் பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................