"எலான் மஸ்க் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்" - வாரன் பப்ஃபெட்

ஆகஸ்ட் 2018ல் செக்யூரிட்டி எக்ஸெஞ்ச் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. பின் டெஸ்லா 20 மில்லியன் டாலர் அபராதத்தை கட்ட ஒப்புக் கொண்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

எனினும் பப்ஃபெட், மஸ்க்கை ஒரு சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டுள்ளார்.


San Francisco: 

புதுமைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க். அவரை உலகின் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பப்ஃபெட், எலான் மஸ்க் குறித்து பேசும் போது "அவர் இன்னும் வளர வேண்டும்" என்று குறிப்பிட்ட்டுள்ளார். 

இதை எளிமையாக கூற வேண்டும் என்றால், "சிலருக்கு அதிக திறமை இருக்கும், மற்றவர்களுக்கு அது குறைவாக இருக்கும் .அது போன்ற நிகழ்வு தான் இது" என்று கூறியுள்ளார். "இதனை பற்றி விவாதிக்கும் அவசியமும் இல்லை என்று பப்ஃபெட்" கூறியுள்ளார். 

எனினும் பப்ஃபெட், மஸ்க்கை ஒரு சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றம் மஸ்க் 2 வாரங்களுக்குள் செக்யூரிட்டி எக்ஸெஞ்ச் நிதி தொடர்பான விஷயங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.

நீதிபதி அலிசன் நாதன் '' மஸ்க் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின் வலுவான காரணங்களை எடுத்துக்கொண்டு வாருங்கள்'' என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 2018ல் செக்யூரிட்டி எக்ஸெஞ்ச் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. பின் டெஸ்லா 20 மில்லியன் டாலர் அபராதத்தை கட்ட ஒப்புக் கொண்டது. மற்றும் மஸ்க் சேர்மன் பதவியிலுருந்து 3 ஆண்டுகள் விலகவும் கூறப்பட்டது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................