அமீரகத்திலிருந்து அமெரிக்கா வந்த விமானத்தில் மர்ம காய்ச்சல்… 11 பேருக்கு சிகிச்சை!

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நியூ யார்க் நகரத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைனர் விமானம் மூலம் வந்த பயணிகளில், 11 பேருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்படப்படுகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமீரகத்திலிருந்து அமெரிக்கா வந்த விமானத்தில் மர்ம காய்ச்சல்… 11 பேருக்கு சிகிச்சை!
New York: 

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நியூ யார்க் நகரத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைனர் விமானம் மூலம் வந்த பயணிகளில், 11 பேருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்படப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைனர் விமானம், 521 பயணிகளை ஏற்றிக் கொண்டு, நியூ யார்க்கில் உள்ள கென்னடி விமான நிலையத்துக்கு வந்துள்ளது. பயணம் ஆரம்பித்த போது ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல் இருப்பதாக தெரிந்தது. ஆனால், பலரும் அதேபோன்று இருப்பதாக விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமான ஊழியர்கள், நியூயார்க் விமான நிலையத்துக்கு இது குறித்து தெரியபடுத்தியுள்ளனர். அங்கு பல ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்துள்ளது. விமானம் தரையிறங்கிய உடன், உடனடியாக காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டதாக சந்தேகப்பட்ட பயணிகளை சோதனை செய்தது மருத்துவக் குழு. அதில் 19 பேருக்குக் காய்ச்சல் இருப்பதாக தெரிந்துள்ளது. அதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்து நியூ யார்க் நகரின் சுகாதார கமிஷனர் ஆக்சிரிஸ் பார்பட், ‘மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதற்கான சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான முடிவுகள் வரவில்லை. சிகிச்சைப் பெற்று வரும் அனைவரும் நலமாகவே உள்ளனர்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணிகளில் சிலர் அமீரகத்தில் இருக்கும் மெக்காவுக்கு சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்கு காய்ச்சல் தொற்று அதிகமாக இருந்துள்ளது. எனவே, பயணிகள் சிலர் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படப்படுகிறது. அந்தக் காய்ச்சல் பாதிப்பு மற்றப் பயணிகளுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 

பார்பட், ’11 பேருக்கும் மட்டுமே சிகிச்சைத் தேவைப்பட்ட நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் காய்ச்சல் வந்திருப்பதாக சந்தேகப்பட்டனர். அது பயத்தின் காரணமாகவே வந்துள்ளது. 19 பேருக்குத் தான் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது. மற்றவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். காய்ச்சல் அறிகுறி அதிகமானால் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறோம்’ என்றார். 


 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................