உங்கள் எம்பி விவரம் 2019

தேர்தல் முடிவுகள் 2019: 17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 542 எம்.பி களை அறிக

 
Candidate details compiled by Datanet
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் 90 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இது கடந்த 2014 தேர்தலை விட 9 கோடி அதிகமாகும். அனைத்து கட்டங்களிலும் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம்தேதி நடந்த தேர்தலில் 69.43 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்தாக 2-ம் கட்டமாக ஏப்ரல் 18-ம்தேதி தேர்தல் நடந்தது. இதில் 60 சதவீத வாக்குகளும், 3-ம் கட்டமாக ஏப்ரல் 23-ல் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகின. 4-ம் கட்ட தேர்தலில் (ஏப்ரல் 29) 64 சதவீதமும், 5-ம் கட்ட தேர்தலில் (மே 6) 57.33 சதவீதமும், 6-ம் கட்ட தேர்தலில் 63.3, கடைசி கட்ட தேர்தலில் 62.87 சதவீதமும் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பான்மை பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றே சொல்கின்றன. எதிர்க்கட்சிகளை வாக்கு எண்ணிக்கை மீது நம்பிக்கை வைத்துள்ளன. 2014 மக்களவை தேர்தலில் பாஜக 543-க்கு 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக ஆட்சியமைத்தது. இந்த முறை பாஜக கூடுதல் இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 300-க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும். ஆனால் ஆட்சியமைக்காது என்கிறது கருத்துக் கணிப்பு. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சி 29 இடங்களிலும், பாஜக 49 இடங்களிலும் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுமை பெற்றதும் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.க்களின் பட்டியலும் அப்டேட் செய்யப்படும்.
................... Advertisement ...................
................... Advertisement ...................