அனைத்து இந்தியா முடிவுகள்: 2019 vs 2014

2014 vs 2019 Results: A state-wise comparison of the General Election Results of 2014 and 2019.

 
மக்களவை தேர்தல் 2019 தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. ஒரு மாதமாக 7 கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவு ஞாயிறன்று முடிவுபெற்றது. கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்கின்றன. 2014 தேர்தலை போல இந்த தேர்தலிலும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஞாயிறன்று வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 302 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களில் வெல்லலாம். மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 42-ல் 26 தொகுதிகளை கைப்பற்றலாம். இங்கு பாஜக 14 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளமும், பாஜகவும் சம தொகுதிகளை கைப்பற்றலாம். 21 தொகுதிகளை கொண்ட ஒடிசாவில் கடந்த முறை பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் பாஜக உத்தரபிரதேசத்தில் 80-க்கு 71 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறை அங்கு 49 இடங்களில் பாஜக வெற்றி பெறலாம். மாயாவதி – அகிலேஷ் கூட்டணிக்கு 29 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற 2 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பெரும்பாலும் கருத்துக்கணிப்புகள் உண்மையாகுவதில்லை. 2014 – தேர்தலின் கருத்துக் கணிப்பு முடிவுகளும் உண்மை நிலவரமும் வேறு மாதிரியாக இருந்தன. பாஜக கூட்டணி 545-க்கு 288 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது. முடிவுகளை பொறுத்தளவில் பாஜக கூட்டணி 336 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 59 இடங்களையும் கைப்பற்றியிருந்தது.
................... Advertisement ...................
................... Advertisement ...................