தேர்தல் முடிவுகள் 2019

Lok Sabha Election Results 2019: Get the latest updates and coverage of the General election results.

 
உலகின் மிகபெரிய ஜனநாயக நடைமுறையான இந்தியா மக்களவை தேர்தல் மே 19 ஆம் தேதி நிறைவடைந்தது. ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் முடிவுகள் 17 வது மக்களவையையும் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்றும் முடிவு செய்யும்.

2014 யில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக, 543 மக்களவை தொகுதிகளில் 282 யை வென்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்த அரசு பாதி எண்ணிக்கையான 272 யை கடந்தது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளில் இவ்வாறு தனிபெரும்பான்மை பெறும் முதல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றது. பாஜக தலைமையிலான எண்டிஏ கூட்டணி 336 தொகுதிகளை வென்றது.

அந்த தேர்தலுக்கு முன் இரண்டு முறை ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியால் 44 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த மக்களவை தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். சென்ற தேர்தலை ஒப்பீடும் போது இது 9 கோடி கூடுதலாகும். முதல் முறையாக 13 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

இந்த தேர்தலுக்காக ஒரு மில்லியன் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன.

முதல் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் 69.43 வாக்கு சதவிகிதம் பதிவானது. இரண்டாவது (ஏப்ரல் 18) மற்றும் மூன்றாம் கட்ட (ஏப்ரல் 23) தேர்தலில் 66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. நான்காம் கட்ட (ஏப்ரல் 29) தேர்தலில் 64 சதவிகிதமும் ஐந்தாம் கட்ட (மே 6) தேர்தலில் 57.33 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகின.

ஆறாம் கட்ட (மே 12) தேர்தலில் 63.3 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. ஏழாம் கட்ட தேர்தலில் 64.15 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. 2014 யை ஒப்பீடும் போது இது ஒரு சதவிகிதம் கூடுதலாகும்.
................... Advertisement ...................
................... Advertisement ...................