அட்டவணை : லோக்சபா தேர்தல் 2019

  • submit to reddit
  • Add to Flipboard Magazine.

2019 லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் நடத்தப்படும். இந்த தேர்தல் முடிவுகள் மே 23 அறிவிக்கப்படும். ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தினங்களில் வாக்களிக்கப்படும். 900 மில்லியன் வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். 18 மற்றும் 19 வயது உடையவர்கள் 15 மில்லியன் ஆகும். நடப்பு லோக்சபா, ஜூன் 3 வரை செயல்படும். லோக்சபா தேர்தல்கள் உடன், ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாசல் பிரதேசம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தலும் நடத்தப்படும்.


இந்தியா முழுவதும் 10 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்படும். அனைத்து வாக்குசாவடிகளிலும் விவிபிஏடி (VVPAT) உபயோகிக்கப்படும். 1.1 மில்லியன் மின்னணு வாக்கு இயந்திரம் (EVMs) உபயோகிக்கப்படும்.


8000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 543 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இரண்டு இடங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.


இந்த தேர்தலில் பின்பற்ற வேண்டியது குறித்தான அறிக்கை, 2019 தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல் அமலுக்கு வந்துள்ளது.


முதல் தேர்தலை ஒப்பிடும் போது, இந்த தேர்தலுக்கான வாக்காளர்கள் எண்ணிக்கை ஐந்து மடங்குகள் உயர்ந்துள்ளது. வாக்களிப்பவர்களின் சதவிகிதமும் உயர்ந்துள்ளது. 1951-52 தேர்தலில் 46 சதவிகிதமும் 2014 யில் 66 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியது. 2014 தேர்தலில் 815 மில்லியன் மக்களில் 550 மில்லியன் மக்களே வாக்களித்தனர்.


இந்த தேர்தலில் 1.5 கோடி பேர் முதல் முறையாக வாக்களிப்பார்கள். 18,19 வயதில் இருப்பவர்கள் மொத்த வாக்காளர்களில் 1.66 சதவிகிதமாகும். மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் 35 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்.

&ndsp;
................... Advertisement ...................
................... Advertisement ...................