கட்சிகள்: முடிவுகள் 2019

Party-wise Election Results: Get a comparison of party-wise results in 2019. Also, tally how they fared in 2014.

 
7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தல் கடந்த ஞாயிறன்றுடன் முடிவுக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு விட்டது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா வராதா என்பதை முடிவுகள் நமக்கு அறிவித்து விடும். 2014 மக்களவை தேர்தலில் பாஜக 543-க்கு 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதன் முறையாக மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் 42-க்கு 34 இடங்களிலும், தமிழ்நாட்டில் அதிமுக 39-ல் 37 இடங்களையும் கைப்பற்றியது. கடந்த தேர்தலில் குறிப்பிடத்தகுந்த இடங்களை வென்ற மாநில கட்சிகள் இவைகள்தான். மற்றொரு மாநில கட்சியான ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் அங்குள்ள 21 இடங்களில் 20 இடங்களை வென்றது.

2014-மக்களவை தேர்தலின் மிகப்பெரும் ஆச்சர்யம் என்னவென்றால் உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையை கடந்த தேர்தலில் பாஜக பெற்றது. இந்த தேர்தலில் 90 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இது கடந்த தேர்தலை விடவும் 9 கோடி அதிகமாகும். 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம்தேதி நடந்த தேர்தலில் 69.43 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்தாக 2-ம் கட்டமாக ஏப்ரல் 18-ம்தேதி தேர்தல் நடந்தது. இதில் 60 சதவீத வாக்குகளும், 3-ம் கட்டமாக ஏப்ரல் 23-ல் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகின. 4-ம் கட்ட தேர்தலில் (ஏப்ரல் 29) 64 சதவீதமும், 5-ம் கட்ட தேர்தலில் (மே 6) 57.33 சதவீதமும், 6-ம் கட்ட தேர்தலில் 63.3, கடைசி கட்ட தேர்தலில் 62.87 சதவீதமும் பதிவாகின.
................... Advertisement ...................
................... Advertisement ...................