Lok Sabha Elections 2019: இந்த பொத்தனை அழுத்துங்கள் என பூத் ஏஜெண்ட் வாக்களிக்க நிர்பந்தம் செய்வது தெரியவந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- பூத் ஏஜெண்ட் பெண் வாக்காளர்களை நிர்பந்திக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
- வீடியோ வைரலானதும், சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
- தேர்தல் பணிகள் பாதிப்படையவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
6வது கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இந்த பொத்தனை அழுத்துங்கள் என வாக்காளர்களை நிர்பந்தித்த பூத் ஏஜெண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதும், ஹரியானா தேர்தல் ஆணையத்திற்கும் கவனத்திற்கும் சென்றது. இதைத்தொடர்ந்தே, பூத் ஏஜெண்ட் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து வெளியான வீடியோவில், ஃபரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் மேஜையில் அமர்ந்திருக்கிறார். பெண் வாக்காளர்கள் வரிசையில் அறைக்குள் நிற்கின்றனர். ஒரு பெண் வாக்களிக்க செல்லும் போது அவரது அருகில் சென்று இந்த பொத்தானை அழுத்துங்கள் என அந்த நபர் நிர்பந்திக்கிறார். இதேபோன்று மேலும், 2 பெண்களிடம் அவர் நிர்பந்திக்கிறார்.
அந்த வீடியோவில், வாக்களிக்கும் இடத்திற்கு செல்லும் பூத் ஏஜெண்ட்டை வேறு எந்த அதிகாரிகளும் தடுத்து நிறுத்தவில்லை. இதையடுத்து, ஹரியானா தேர்தல் ஆணையத்திற்கு பலரும் அந்த வீடியோவை டேக் செய்துள்ளனர்.
— SHAHID KURESHI (@UqAsmTfpZGNwK0e) May 12, 2019
இதைத்தொடர்ந்து, அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த ஹரியானா தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர், வாக்களிக்கும் அறையில், வேறு எந்த அசாம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால், வேறு எதுவும் நடைபெறவில்லை, 3 பேரிடம் மட்டுமே அவர் வாக்களிக்க நிர்பந்தித்தார் என்று எப்படி கூறுகிறீர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறும்போது, ஃபாரிதாபார் தேர்தல் கண்காணிப்பாளரை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உடனடியாக அனுப்பியதாகவும், அங்கு தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில், பூத் ஏஜெண்ட் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
The person in the video is the Polling agent who has been arrested in the afternoon itself. FIR lodged. He was trying to effect at least 3 lady voters. Observer & ARO with teams visited the booth at Asawati in prithala constituency. He is satisfied that voting was never vitiated
— DISTRICT ELECTION OFFICE FARIDABAD (@OfficeFaridabad) May 12, 2019
மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன், தேர்தல் கண்காணிப்பாளர் வழங்கிய அறிக்கையை நன்கு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஹரியானாவில், நேற்று நடந்த வாக்குப்பதிவில், 69.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஃபரிதாபாத்தில் மட்டும் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.