ஃபிளாப்பான’ அகிலேஷ் யாதவ்- மாயாவதி கூட்டணி... பாஜகவை தோற்கடிக்க தவறிய காங்கிரஸ்!

பாஜக தலைவர்கள், சுல்தான்பூரில் போட்டியிட்ட மேனகா காந்தி மற்றும் பேரில்லியில் போட்டியிட்ட சந்தோஷ் கங்வார் ஆகிய இருவரும் முதல் சுற்று எண்ணிக்கையில் முன்னிலை வகித்ததாக செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியானது.

அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பில் யாதவ் கன்னௌஜ் மாநிலத்தில் மறுதேர்தலில் போட்டியிட்டு முன்னிலை வகிக்கிறார்.

ஹைலைட்ஸ்

  • உத்திரபிரதேசத்தில் 50க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை
  • அவரவர் தொகுதிகளில் யாதவ்கள் முன்னிலை வகிக்கிறார்கள்
  • யாதவ்-முஸ்லிம்கள் கூட்டணி 50க்கும் அதிகமான இடங்கள் எதிர்பார்க்கப்பட்டது
New Delhi:

2014ம் ஆண்டு பாஜக அணி 80 இடங்களில் 73 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது 50க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் மாயாவதி-அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் அணியும் முன்னிலை வகிக்கிறது. 

பாஜக தலைவர்கள், சுல்தான்பூரில் போட்டியிட்ட மேனகா காந்தி மற்றும் பேரில்லியில் போட்டியிட்ட சந்தோஷ் கங்வார் ஆகிய இருவரும் முதல் சுற்று எண்ணிக்கையில் முன்னிலை வகித்ததாக செய்தி வெளியானது.

பாஜக அணியின் வருண் காந்தி, அவரின் தாயின் சொந்த தொகுதியான பிலிபிட்டிலும், அமைச்சர் ரீட்டா பஹுகுணா ஜோஷி அலகாபாத்திலும் போட்டியிட்டனர். இப்போது போட்டியாளர்களின் நெருங்கிய எண்ணிக்கை வித்தியாசத்தில் தான் உள்ளனர்.

அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பில் யாதவ் கன்னௌஜ் மாநிலத்தில் மறுதேர்தலில் போட்டியிட்டு முன்னிலை வகிக்கிறார்.

யாதவ் முஸ்லிம்கள் கூட்டணி 50க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்காமல் பாஜக முன்னிலை வகிக்கிறது. தீவிர பிரசாரத்துக்கு பிறகு 80 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் பின்னடைவையே சந்தித்துள்ளது.

Newsbeep

கிழக்கு உத்திர பிரதேசத்தை பொறுபேற்ற  பிரியங்கா காந்தி, மோடி போட்டியிட்ட வாரணாசி மற்றும் கோரக்ப்பூர் ஆகிய இடங்களில் ஆதரவு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உத்திர பிரதேச முதலமைச்சராக இருக்கும் உத்திர பிரதேசத்தில் பாஜகவே அதிக ஆதரவு பெற்றது.

பிரியங்கா காந்தியின் பிரசாரம் இந்த மாநிலத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதாலும், அகிலேஷ் யாதவ்-மாயாவதி கூட்டணி சேர்ந்ததாலும் பாஜக அல்லாத வாக்குகள் பிரிந்தன.