This Article is From Apr 19, 2019

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்தனர்!!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 150 பேருக்கு அவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவர்கள் வாக்களித்தனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்தனர்!!

வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டோர்.

Chennai:

தமிழகத்தில் முதன்முறையாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் 156 பேருக்கு அவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்  அவர்கள் வாக்களித்தனர். 

இந்தியாவிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்தனர் என்பது இதுவே முதன்முறையாக இருக்கும் என கருதப்படுகிறது. வாக்களித்த பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், 'நான் கடந்த 7 ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன். கடைசியாக நான் 2001 சட்டசபை தேர்தலில் வாக்களித்தேன். இன்றைக்கு நான் மிகவும் சிறப்பான நாளாக உணர்கிறேன். வாக்களித்ததில் எனக்கு மகிழ்ச்சி' என்று தெரிவித்தார். 

gebmq2io

முன்னதாக கீழ்ப்பாக்கம் மருத்துவனையில் மாதிரி வாக்களிப்பு முறையை லயோலா கல்லூரி மாணவர்களும் தேர்தல் அதிகாரிகளும் செய்து காண்பித்தனர். அது மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு வாக்களிக்க உதவியாக இருந்தது. 

மருத்துவமனை இயக்குனர் பூர்ணா சந்திரிகா கூறுகையில், 'நாட்டிலேயே இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பது என்பது இதுவே முதன்முறை. இதேபோன்று மனநல பாதிப்பு மருத்துவமனைக்குள் வாக்குச் சாவடி அமைப்பது முதன்முறை' என்று தெரிவித்தார். 

இங்கு வாக்குப்பதிவு நடைபெற்றதை பார்த்த மற்ற நோயாளிகளும் 2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். 

.