காங் - திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
காங் - திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள்!

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து திமுக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது.


New Delhi: 

அதிமுக - பாஜக கூட்டணியை காட்டிலும், காங்கிரஸ் - திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 38 தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதிமுக - பாஜக கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் தெரிவித்துள்ளன.

நீயூஸ் 24- டூடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பில், திமுக - காங்கிரஸ் கூட்டணி 31 தொகுதிகளில் வெற்ற பெறலாம். அதிமுக - பாஜக கூட்டணி 6 தொகுதிகளிலே வெற்றி பெறலாம் என கணித்துள்ளது. நீயூஸ் 18 இந்தியா இப்சோஸ்சுடன் (IPSOS) இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், திமுக - காங்கிரஸ் கூட்டணி 22 - 24 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் அதிமுக - பாஜக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகளில் வெற்றி பெறாலம் என்றும் கணித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், 20 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் போட்டியிட்டது.

இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது.

கடந்த 2014 பொதுத்தேர்தலில், திமுக ஒரு தொகுதியில் கூடி வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 39ல் 37தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுபோக பாஜக மற்றும் பாஜக ஒவ்வொரு தொகுதியில் வெற்றி பெற்றது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................