62 இடங்களை கைப்பற்றி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

Delhi Assembly Election Results 2020 Live: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

62 இடங்களை கைப்பற்றி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

Election Results 2020: தலைநகரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  பாஜக 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறினார். 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், 'டெல்லி மக்களே! ஐ லவ் யூ.  உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். புதிய ரகமான அரசியலுக்கு இந்த தேர்தல் வெற்றி வித்திட்டுள்ளது. இது பாரத தாய்க்கு கிடைத்த வெற்றி' என்று கூறினார்.

தனது பேச்சில் ஹனுமனையும் குறிப்பிட்ட கெஜ்ரிவால்,'இன்றைக்கு செவ்வாய்க் கிழமை. இது ஹனுமனின் நாள். டெல்லிக்கு ஹனுமன் அருள் பாலித்துள்ளார். ஹனுமனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்' என்று பேசினார்.

டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது ஹனுமனை பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு கெஜ்ரிவால் உரையாற்றினார். இதனை விமர்சித்த பாஜக வெற்றி பெறுவதற்காக இந்துத்துவ அரசியலை கெஜ்ரிவால் கையில் எடுக்கிறார் என்று கூறியது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி. உங்களின் நலனுக்காக கட்சி தொடர்ந்து உழைக்கும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள். 

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி டெல்லி மக்களுக்கு நிறைவேற்றும் என நம்புகிறேன். பாஜக தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வோம். எதிர்காலத்தில் இதுபோன்ற பின்னடைவு ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.' என்று கூறியுள்ளார். 

கடந்த 2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 63 இடங்களும், பாஜகவுக்கு 7 இடங்களும் கிடைத்துள்ளன.  

Feb 11, 2020 18:50 (IST)
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,'டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் பூர்த்தி செய்வதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார். 
Feb 11, 2020 18:05 (IST)
டெல்லியில் பாஜக தோல்வியை ஏற்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பேட்டி அளித்திருந்த திவாரி, 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியிருந்தார். 
Feb 11, 2020 16:55 (IST)
Feb 11, 2020 16:32 (IST)
'டெல்லி மக்கள் என்னை மகனாக எண்ணி இந்த மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார்கள். இந்த வெற்றி 24 மணிநேரமும் மின்சாரம் பெறும் குடும்பத்தினரின் வெற்றி. இந்த வெற்றி குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் பெறுவோருக்கு கிடைத்த வெற்றி' - அரவிந்த் கெஜ்ரிவால். 
Feb 11, 2020 16:06 (IST)
பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடக் கூடாதென்று ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
Feb 11, 2020 15:45 (IST)
Feb 11, 2020 14:48 (IST)
Feb 11, 2020 14:43 (IST)

ஆம் ஆத்மிக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை: பாஜக செய்திதொடர்பாளர் பிரியா சவுத்ரி

ஆம் ஆத்மி 58 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற உள்ளது. அவர்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. எனினும், பாஜகவும் அதன் பிரச்சாரத்தில் எந்த குறையும் வைக்கவில்லை. பாஜகவின் வாக்கு சதவீத உயர்வை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 
Feb 11, 2020 14:40 (IST)
Feb 11, 2020 14:40 (IST)
Feb 11, 2020 13:19 (IST)
Delhi Elections: ஆம் ஆத்மி 56 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. 

Feb 11, 2020 11:34 (IST)
Feb 11, 2020 11:33 (IST)
Feb 11, 2020 10:24 (IST)
டெல்லி தேர்தல் முடிவுகள்: நியூடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை


முன்னதாக நியூடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். 
Feb 11, 2020 10:14 (IST)
பெரும்பாலான தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி உரைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

Feb 11, 2020 09:34 (IST)
டெல்லி தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதை தொடர்ந்து, டெல்லி ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Feb 11, 2020 08:52 (IST)

டெல்லி தேர்தல் முடிவுகள்: கோலே மார்க்கெட் வாக்கு எண்ணிக்கை மையம்
Feb 11, 2020 08:40 (IST)

டெல்லி தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி வேட்பாளர்கள் முன்னிலை விவரம்:

 
Feb 11, 2020 08:36 (IST)
Feb 11, 2020 08:36 (IST)

Feb 11, 2020 08:18 (IST)
3 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கிறது. 
Listen to the latest songs, only on JioSaavn.com