அடுத்த 25 ஆண்டுக்கு மோடியை அடிச்சிக்க ஆளே இல்ல - சிவ சேனா

Election results 2019: “அடுத்த ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு நாட்டை மேலும் முன்னேற்றுவார்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

அடுத்த 25  ஆண்டுக்கு மோடியை அடிச்சிக்க ஆளே இல்ல - சிவ சேனா

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜகவை விமர்சித்திருந்தது.

Mumbai:

பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கும் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே வாழ்த்து தெரிவித்துள்ளார். இனி வரும் 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடிக்கு சவாலாக யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜகவை விமர்சித்திருந்தது. ஆனால் இறுதியில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு மீண்டும் கூட்டணியை புதுப்பித்துக் கொண்டது

சிவ சேனாவில் பாராளுமன்ற உறுப்பினரான சஞ்சய் ராவுட் பிரதமர் மோடியின் மீதான ரபேல் ஒப்பந்த ஊழல் குறித்து “சூழல் மாயத்தோற்ற உருவாக்கியது”என்று விமர்சித்திருந்தார். 

தற்போது வெற்றிக்குப் பின் “உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடிக்கு சவாலாக யாரும் இல்லை”என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேசிய ஜனநாயக முன்னணி நன்றாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது

மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவ சேனாவும் 40 இடங்களை இதுவரை வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் 7 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. 

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு நாட்டை மேலும் முன்னேற்றுவார்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.