மோடி அலை சுனாமியாக மாறிவிட்டது - மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

முந்தைய தேர்தலில் மோடி அலை வீசியது. அது தற்போது சுனாமியாக மாறியுள்ளது. தற்போது நிலவரங்களை பார்க்கும் போது மகாராஷ்டிராவில் எங்களுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

மோடி அலை சுனாமியாக மாறிவிட்டது - மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

Election results 2019: பாஜக மற்றும் சிவ சேனா இரண்டு கட்சியும் தேர்தல் பணியினை சிறப்பாக செய்துள்ளன

Mumbai:

2014இல் இருந்த மோடி அலை இந்த தேர்தலில் சுனாமியாக மாறியுள்ளது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

17வது மக்களவைத் தேர்தலில் 300 இடங்கள் வரை முன்னிலை வகித்து வருகிறது பாஜக தலைமையிலான  மோடி அரசு. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

“முந்தைய தேர்தலில் மோடி அலை வீசியது. அது தற்போது சுனாமியாக மாறியுள்ளது. தற்போது நிலவரங்களை பார்க்கும் போது மகாராஷ்டிராவில் எங்களுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். எங்களின் பொறுப்பினை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் செயல்பாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

பாஜக மற்றும் சிவ சேனா இரண்டு கட்சியும் தேர்தல் பணியினை சிறப்பாக செய்துள்ளன. அதனால்தான் அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.