தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி! - 2 நாட்களாக தண்ணீர் கூட குடிக்காத லாலுபிரசாத் யாதவ்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தது.

தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி! - 2 நாட்களாக தண்ணீர் கூட குடிக்காத லாலுபிரசாத் யாதவ்!!

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் கட்சி போட்டியிட்ட எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை

Ranchi/Patna:

தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியடைந்த லாலு பிரசாத் யாதவ் 2 நாட்களுக்கு பின்னர் மதிய உணவை சாப்பிட்டுள்ளார். பீகாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சியுடன் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டது. 

இதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே கிஷான்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற 39 இடங்களையும் பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி கைப்பற்றியது. 

இதற்கிடையே மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், தேர்தல் முடிவுகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை இருக்கின்றன. 

இதற்காக அவர் சிறையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேர்தல் தோல்வி அவருக்கு பேரதிர்ச்சியை அளித்த நிலையில் 2 நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் விரக்தியில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தால் நிலைமை மோசமாகி விடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். 

இதையடுத்து அவர், நேற்று மதிய உணவை எடுத்துக் கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 1997 தேர்தலுக்கு பின்னர் பீகார் மாநிலத்தில் லாலுவின் கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாதது என்பது இதுவே முதன்முறையாகும்.