மக்களவை தேர்தல் 2019: தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை!

திருநெல்வேலியில் திமுக முன்னிலைப் பெற்ற நிலையில், ஈரோடு மற்றும் விருதுநகரில் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன

 Share
EMAIL
PRINT
COMMENTS
மக்களவை தேர்தல் 2019: தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 19 தொகுதிகளில் போட்டியிட்டது

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் காலை நிலவரப்படி தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன. குறிப்பாக 3 நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சிகள் நல்ல முன்னணியில் உள்ளன.

திருநெல்வேலியில் திமுக முன்னிலைப் பெற்ற நிலையில், ஈரோடு மற்றும் விருதுநகரில் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 19 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளில் போட்டியிட்டன. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

அதிமுக கூட்டணி, பெரும்பான்மையான இடங்களில் பின்னடைவைக் கண்டுள்ளது. 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................