பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தம்.

பின் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது

பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தம்.

17வது மக்களவை தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று வாக்கு என்னிக்கை நடந்து வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக அனைத்து இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.

அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் சென்னை ராணி மேரி கல்லூரி முன்பு இன்று காலை அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு சலசலப்பு ஏற்பட்ட காரணத்தால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

பின் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது.

Newsbeep

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் முறையாக இல்லை என அதிமுக வேட்பாளர் ராஜேஷ், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கருணாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.