கர்நாடகாவில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் பிராகஷ் ராஜ் படுதோல்வி!!

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிஜேபி மற்று காங்கிரஸுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டார்.  

கர்நாடகாவில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் பிராகஷ் ராஜ் படுதோல்வி!!
Bengaluru:


தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிஜேபி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டார்.  அதில் மிக குறைந்த வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். 

நான் பல விமர்சனங்கள், கேலி பேச்சுக்கள் போன்றவற்றால் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்.  இருந்த போதிலும் நான் தொடர்ச்சியாக போராடுவேன்.  அரசியல் என்னும் கரடுமுரடான பாதையில் என் பயணத்தை தொடங்கிவிட்டேன்.  இந்த பயணத்தில் எனக்கு துணையாய் இருந்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  

கடந்த ஜனவரி 1ஆம் தேதி தன் அரசியல் விஜயத்தை உறுதிப்படுத்தினார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதனை தொடர்ந்து ஆட்டோ ரிக்‌ஷாக்களில் பிரசாரங்களை மேற்கொண்டார். 

கர்நாடகத்தில் மொத்தம் 28 தொகுதிகளில் 24 இடங்களை பிடித்து பிஜேபி முன்னிலையில் உள்ளது.  காங்கரஸ் 2 இரண்டுகளையும், பாரதிய ஜனதா தளம் 1 இடத்தையும் பிடித்துள்ளது.