“ஹர ஹர மோடி”என்று துதி பாடிய மோடி பக்தர்கள்!!

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நரேந்திர மோடியின் தாய் ஹீராபின் அவர்களின் முன் பாஜக தொண்டர்கள் சிலர் “ஹர ஹர மோடி”, “ஜெய் ஜெய் மோடி” மற்றும் “வந்தே மாதரம்” என்று ஆரவாரம் செய்தனர். 

Gandhinagar, Gujarat:

தேர்தல் வாக்கெடுப்பு இன்று சிறப்பாக நடைப்பெற்றதில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.  இந்த சிறப்பான வெற்றியை கொண்டாடும் வகையில் காந்திநகர், ரைசின் கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டின் முன் பாஜகவினர் குழுமியிருந்தனர்.  2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது மோடி அரசு.  

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நரேந்திர மோடியின் தாய் ஹீராபின் அவர்களின் முன் பாஜக தொண்டர்கள் சிலர் “ஹர ஹர மோடி”, “ஜெய் ஜெய் மோடி” மற்றும் “வந்தே மாதரம்” என்று ஆரவாரம் செய்தனர்.  மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இமாலய வெற்றி பெற்றிருக்கும் பாஜகவினர் இன்று மாலை பாஜக தலைமை செயலகத்தில் வெற்றி விழாவை கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.  

கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி தன் வாக்கை பதிவு செய்ய கிளம்பும் முன் அவல், தேங்காய் மற்றும் இனிப்பு வழங்கி, வெற்றிக்கான வாழ்த்துக்களை தெரிவித்து நரேந்திர மோடியை அனுப்பி வைத்திருக்கிறார் அவரது தாய் ஹீராபின்.