This Article is From May 23, 2019

எடப்பாடியின் ஆட்சிக் கட்டிலை அசைத்து பார்க்கும் தேர்தல் முடிவுகள்

தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடை பெற்றது. வேலூர் தொகுதியில் பணப் பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது. 22 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. 

எடப்பாடியின் ஆட்சிக் கட்டிலை அசைத்து பார்க்கும் தேர்தல் முடிவுகள்

தேசிய தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராகிவிடுவார் என்று தெரிவித்துள்ளார். நடந்த சட்டமன்றத்  தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியதிகாரத்தை திமுக பெறும் என்று எதிர்பார்த்து  வெளிப்படையாகவே காங்கிரஸை ஆதாரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடை பெற்றது. வேலூர் தொகுதியில் பணப் பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது. 22 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. 

சட்டசபை தேர்தலில் முடிவில் குறைந்த் பட்சம் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கணிசமான வாக்குகளை பிரிக்கிறது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி என அறிவித்துள்ளன. அதிமுக ஆளும் பாஜகவுன் கூட்டணியைக் கொண்டுள்ளன.

தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. “இந்தக் கருத்துக் கணிப்பு நம்பகத் தன்மையற்றது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஸ்டாலின் சகோதரி  கனிமொழி “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பினை கருத்தில் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி அமேதியில் ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழக தேர்தலைப் பொறுத்த வரை திமுக முன்னணியில் உள்ளது.  

.