மோடியை எதிர்த்து காங்கிரஸ், மாயாவதியின் ஆதரவை பெற்ற மம்தா!!

மேற்கு வங்க தேர்தல் களத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவாகியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மோடியை எதிர்த்து காங்கிரஸ், மாயாவதியின் ஆதரவை பெற்ற மம்தா!!

சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு நாளுக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.


New Delhi: 

மேற்கு வங்க தேர்தல் களத்தில் மோடியை கடுமையாக எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் மற்றும் மாயாவதியின் ஆதரவை பெற்றிருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. தனக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு அவர் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார். 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேற்கு வங்க தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு பாஜகவுக்கு கடும்போட்டியை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அளித்து வருகிறது. 

பாஜக தலைவர் அமித் ஷா பேசவிருந்த கூட்டங்கள் சிலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமித் ஷா பங்கேற்ற பேரணியை தொடர்ந்து வன்முறை வெடித்தது. 

இதன்பின்னர் மேற்கு வங்கத்தில் சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவும், திரிணாமூல் காங்கிரசும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்தனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தேர்தல் பிரசாரத்தை ஒரு நாளைக்கு முன்பாக அதாவது இன்றிரவு 10 மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. 

இதற்கிடையே, மோடியை கடுமையாக எதிர்த்ததால் மம்தாவை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். அப்போது மம்தாவுக்கு ஆதரவாக மாயாவதி, காங்கிரஸ் தரப்பில் ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். 

மம்தாவை குறிவைத்து மோடியும் பாஜகவும் செயல்படுகிறது, இது ஏற்க முடியாத ஒன்று என மாயாவதி கூறியிருந்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மோடி நடத்தை விதிமுறைகள் என மாறிவிட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார். 

இந்த நிலையில், மாயாவதி மற்றும் காங்கிரசுக்கு மம்தா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், 'மாயாவதி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மற்றும் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. ஜனநாயகத்தின்மீது பாஜக நேரடி தாக்குதலை தொடுத்துள்ளது. இதற்கு மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்' என்று கூறியுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................