ப்ளஸ் ஒன் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ப்ளஸ் ஒன் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள் வெளியீடு!

ப்ளஸ் ஒன் தேர்வு தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக இருந்தது.


ப்ளஸ் ஒன் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான மறு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகளை மறு தேர்வு எழுதியவர்கள் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முடிவுகளை அறிய தேர்வு எழுதியவர்களின் ரோல் நம்பர், பிறந்த தேதி ஆகியவை அவசியம். இந்தாண்டு நடந்த ப்ளஸ் ஒன் தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 பேர் எழுதினார்கள். அவர்களில் 95 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 
 


தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது எப்படி?

1 - பள்ளி கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான  www.dge.tn.nic.in -யை ஓபன் செய்து கொள்ள வேண்டும். 

2 - ரிசல்ட் லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

3 - ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். 

4 - இவற்றை சப்மிட் செய்தால் ப்ளஸ் ஒன் ரிசல்ட்டை அறிந்து கொள்ள முடியும்.
 

Tamil Nadu +1 Supplementary Exam Result: Direct Link


நடப்பாண்டில் ப்ளஸ் ஒன் பாஸ் செய்தவர்களில் 96.5 சதவீதம்பேர் மாணவிகள். 93.3 சதவிதம் பேர் மாணவர்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 2,634 பள்ளிகள் 10 சதவீத தேர்ச்சியை ப்ளஸ் ஒன்னில் எட்டியுள்ளன. 
 

Click here for more Education Newsசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................