This Article is From May 28, 2020

மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம்!!

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் என்டிடிவியிடம் கூறும்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம்!!

மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம்!!

New Delhi:

ஊரடங்கு காரணமாக நிலுவையில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்றும், அதன் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். எனினும், அந்த நேரத்தில் கள நிலவரத்தை பொறுத்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களின் கருத்துக்களால் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருவதால், விரைவில் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து, ஜூன் மாதத்திலே மீண்டும் பள்ளிகள் துவக்கப்படும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன. 

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் என்டிடிவியிடம் கூறும்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் உச்சத்தில் இருக்கும்போது, ​​ஜூலை மாதம் எவ்வாறு தேர்வுகள் நடத்தப்படலாம் என்று கேள்வி எழுப்பியதற்கு, ஜூலை மாதம் என்ன நடக்கும் என்று எங்களால் கணிக்க முடியாது. உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.

"நிலைமை இயல்புக்கு மாறும் என்று நான் நம்புகிறேன், அவ்வாறு சரியாகவில்லை என்றால், நாங்கள் அமைச்சரவையையும், மாணவர், பெற்றோர்களையும் அணுகுவோம். அனைத்து பரிந்துரைகளையும் நாங்கள் பரிசீலிப்போம்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.

நிலுவையில் உள்ள பொதுத் தேர்வுகள் ஜூலை மாதத்திலும், பல்கலைக்கழக தேர்வுகள் ஆகஸ்டிலும் நடைபெறும். இறுதி ஆண்டு மாணவர்கள் தேர்வுகளுக்கு வருவார்கள். முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் பெறுவார்கள் என்றார்.

என்.சி.இ.ஆர்.டி.யின் பணிக்குழு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலைமையை மதிப்பிடும், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தை பல்கலைக்கழக மானிய ஆணையம் சமர்ப்பிக்கும்.

மார்ச் 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. 10 வயது வரையிலான குழந்தைகள் குறிப்பாக வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் என்பதால், பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் மழலையர் பிரிவுகள் பிப்ரவரி மாத தொடக்கத்திலே மூடப்பட்டன. பின்னர், இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை பிரிவுகளும் மூடப்பட்டன.

.