This Article is From Mar 28, 2019

ஐ.ஐ.டி. மெட்ராஸில் எம். டெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்!!

அட்மிஷனுக்கு பதிவு செய்யும் முறைகள் இணைய தளமான mtechadm.iitm.ac.in. -ல் நடைபெற்று வருகிறது.

ஐ.ஐ.டி. மெட்ராஸில் எம். டெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்!!

ஐ.ஐ.டி. மெட்ராஸ் கல்வி நிறுவனம்

Chennai:

சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் எம்.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. எம்.டெக் படிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பல பிரிவுகளுக்கான எம்.டெக். படிப்புகள் வரும் ஜூலை மாதம் தொடங்குகின்றன. இதுதொடர்பாக mtechadm.iitm.ac.in. என்ற இணைய தளத்தில் ஏப்ரல் 10-ம்தேதி வரை லிங்க் ஆன்லைனில் இருக்கும். இந்த இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் 

எம்.டெக் படிக்க விரும்புவோருக்கு நிதியுதவி பெறும் வாய்ப்புகளும் உள்ளன. எம்.டெக்கில் சிறந்து விளங்கும் மாணவர்கள் அடுத்ததாக பி.எச்டி படிப்பதற்கு தேர்வாகுவார்கள் என ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஐ.ஐ.டி. மெட்ராஸில் எம்.டெக் படிப்போர் தங்களது ப்ராஜெக்ட் ஒர்க்குகளை ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலும் செய்துகொள்ளலாம் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
 

ஐ.ஐ.டி. மெட்ராஸ் எம்.டெக் படிப்புகளுக்கான முக்கிய நாட்கள்
விண்ணப்பம் ஆரம்பிக்கும் நாள்06.03.2019 (புதன்) 11:00
விண்ணப்பம் முடியும் நாள்10.04.2019 (புதன்) 23:59
நேர்முக தேர்வு27.04.2019 (சனி)
அட்மிஷன் ரிப்போர்ட்டிங்22.07.2019 (திங்கள்)
நிரப்பப்படாத இடங்களுக்கான நேர்முக தேர்வு23.07.2019 (செவ்வாய்) / 24.07.2019 (புதன்)
புகைப்பட பகுதி - என்ரோல்மென்ட்25.07.2019 (வியாழன்)
ஓரியன்டேஷன் நிகழ்ச்சி26.07.2019 (வெள்ளி)
வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள்29.07.2019 (திங்கள்)

.