This Article is From Jul 04, 2019

மோடி 2.0 அரசின் பொருளாதார சீர்சிருத்தத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் - சர்வே

மந்தமான ஜிஎஸ்டி வசூல் மற்றும் நேரடி வரிகளில் எதிர்பார்த்ததைவிட குறைவான வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. தனியார் முதலீடுகள், மந்தநிலை, வேலைவாய்ப்பு உருவாக்கம், வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவன நெருக்கடி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மோடி 2.0 அரசின் பொருளாதார சீர்சிருத்தத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் - சர்வே

உலகின் ஐந்தாவது பொருளாதாரமாக மாறுவதற்கான முயற்சியில் இருக்கும் சிக்கலை கோடிட்டு காட்டும் எனத் தெரிகிறது.

New Delhi:

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து மோடி அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. பொருளாதாரத்தின் சவால்களை கோட்டிட்டு காட்டும் பொருளாதார ஆய்வு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தயாரித்த கணக்கெடுப்பு, உலகின் ஐந்தாவது பொருளாதாரமாக மாறுவதற்கான முயற்சியில் இருக்கும் சிக்கலை கோடிட்டு காட்டும் எனத் தெரிகிறது.

 2024 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் அளவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்ற விரும்பும் மோடியின். இலக்கை நிறைவேற்ற சீர்திருத்த வழிகளையும் இது விவரிக்கும். இந்த சர்வேயில் பொதுவாக மேக்ரோ பொருளாதாரம், தொழில் மற்றும் பல்வேறு துறைகள் குறித்த கண்ணோட்டங்களை இது வெளிப்படுத்தும். மோடியின் 2.0 அரசின் முதல் பட்ஜெட்டை நாளை நிர்மலா சீதாராமன் முன்வைக்கவுள்ளார். 

“எனது முதல் மற்றும் புதிய அரசாங்கத்தில் முதல் பொருளாதார சர்வேவை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்க உற்சாகத்துடன் எதிர்நோக்குகிறேன் #EcoSurvey2019 என்ற ஹேஸ் டேக்கையும் பயன்படுத்தியிருந்தார். உற்பத்தி மற்றும் வேளாண் துறையில்  பொருளாதாரம் மிக முக்கிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. ஜனவரி -மார்ச் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 

மந்தமான ஜிஎஸ்டி வசூல் மற்றும் நேரடி வரிகளில் எதிர்பார்த்ததைவிட  குறைவான வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. தனியார் முதலீடுகள், மந்தநிலை, வேலைவாய்ப்பு உருவாக்கம், வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவன நெருக்கடி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதார கணக்கெடுப்பு முக்கிய புள்ளி விவரங்கள் மற்றும் துறைசார் போக்குகள் பற்றிய ஆழமான ஆராய்ச்சியும் இடம்பெற்று இருப்பதால் பொருளாதார ஆய்வு ஒரு பயனுள்ள கொள்கை ஆவணமாக செயல்படுகிறது. 

.