டெல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் நில நடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி

இந்திய நேரப்படி சரியாக 9.08 க்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளை சில நிமிடங்களுக்கு உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் நில நடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி

அண்டை மாநிலமான அரியானாவின் ரோதக் வரையில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

New Delhi:

தலைநகர் டெல்லி மற்று அதன் சுற்று வட்டாரப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியபோது மக்கள் வீதிக்கு வந்து கத்தத் தொடங்கினர். ரிக்டர் அளவுகோலில் 4.6 - ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் வரை நீடித்தது.

அண்டை மாநிலமான அரியானாவின் ரோதக் வரையில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய நேரப்படி சரியாக 9.08 க்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளை சில நிமிடங்களுக்கு உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் இருந்து ரோதக் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

நிலநடுக்கம் எற்பட்டதை தொடர்ந்து அதுகுறித்த பதிவுகளை நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

'என்னுடைய டேபிள், படுக்கை, சீலிங் ஃபேன் ஆகியவை  கடுமையாக அதிர்ந்தன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த எனது டிவியும் அதிர்ந்தது. சுமார் 7-8 வினாடிகளுக்கு அதிர்வு ஏற்பட்டது' என்று குர்கானை சேர்ந்த குனால் ஓப்ராய் என்பவர் தெரிவித்துள்ளார்.