This Article is From Jul 19, 2019

அருணாச்சல பிரதேசத்தில் 3 இடங்களில் நில நடுக்கம்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருணாச்சல பிரதேசத்தில் 3 இடங்களில் நில நடுக்கம்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

அசாம் மாநிலத்திலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

New Delhi:

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் நில நடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சலில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது.

அருணாச்சலின் கிழக்கு காமெங் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு நில நடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம்தெரிவித்தள்ளது.

முதல் நில நடுக்கத்திற்கு பின்னர் குருங் குமே, கிழக்கு காமெங் மாவட்டங்களில் அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் முறையே 4.9 மற்றும் 3.21 ஆக பதிவானது.

இதேபோன்று அசாமின் கவுகாத்தி, திமாப்பூர் பகுதியிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

.