This Article is From Sep 18, 2019

E-Cigarettes Ban: நாடு முழுவதும் இ-சிகரெட்டுகளுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாடு முழுவதும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

New Delhi:

நாடு முழுவதும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாடு முழுவதும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி இந்த பொருட்களின் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிகப்படுகிறது. மேலும், இ-சிகரெட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிகப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, இ-சிகரெட் தடை விதிப்பதற்கான சட்டத்தை 2019, சமீபத்தில் ஒரு அமைச்சர்கள் குழு (GoM) ஆய்வு செய்தது. 

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள அந்த வரைவுச் சட்டத்தில், முதல் முறையாக மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. 

மாற்று புகை சாதனங்களான இ-சிகரெட்டுகள், வெப்பம் எரிக்காத புகைபிடிக்கும் சாதனங்கள், வேப் மற்றும் ஈ-நிகோடின், சுவை கொண்ட ஹூக்காக்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பது, நரேந்திர மோடி அரசின், முதல் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.

.