திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

80 வயதான துரை முருகன் அவர்கள் இன்று உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் பேச்சாளர் என பன்முக கலைஞராக விளங்குபவர் துரைமுருகன். 44 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் துரைமுருகன். நகைச்சுவையுடன் பேசுவதில் திறமை பெற்றவர். 80 வயதான துரை முருகன் இன்று உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் தகவல்கள் விரைவில்