சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் நோய் பரவல் அதிகமாக உள்ளது: முதல்வர் எடப்பாடி

நாட்டிலேயே குணமடைந்தோர் எண்ணிக்கை நம் மாநிலத்தில் தான் அதிகம் உள்ளது. அதேப்போன்று மரண விகிதமும் 0.80 சதவீதம் என்கிற அளவில்தான் உள்ளது.

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் நோய் பரவல் அதிகமாக உள்ளது: முதல்வர் எடப்பாடி

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் நோய் பரவல் அதிகமாக உள்ளது: முதல்வர் எடப்பாடி

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் நோய்ப்பரவல் அதிகமாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

சென்னையில் மக்கள் நெருக்கமாக வாழும் நிலை உள்ளது. அதனால் நோய்ப்பரவல் அதிகரித்து வருவதால் அதைக்கட்டுப்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 13000 பரிசோதனைகள், மேற்கொள்ளப்படும் நிலையில், சென்னையில் மட்டும் 4000 பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

யார் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் தொடர்புடையவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இன்றைய தினம் 23,495 பேருக்கு தொற்று கண்டறியப்ப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 56 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே குணமடைந்தோர் எண்ணிக்கை நம் மாநிலத்தில் தான் அதிகம் உள்ளது. அதேப்போன்று மரண விகிதமும் 0.80 சதவீதம் என்கிற அளவில்தான் உள்ளது.

சென்னையில் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ, டாக்சி, முடிதிருத்தும் நிலையம், அழகு நிலையம், நகைக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. உணவகங்களின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது, 50 சதவீத மக்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி தளர்வுகளை பின்பற்ற வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக முகக்கவசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 87 லட்சம் பேர் உள்ளனர். நிறையே பேர் தொழிற்சாலைகளுக்கு பணியாற்ற, பணிக்கு செல்கின்றனர். பொதுமக்கள் காய்கறி, மளிகைக்கடை, மீன் மார்க்கெட், இறைச்சிக்கடைக்கு செல்கிறீர்கள் வெளியில் செல்லும்போது சமுக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.