அட்டக்கத்தியுடன் போலீசாரை ஓட ஓட துரத்திய போதை ஆசாமி!

கடந்த நவ.17ஆம் தேதி அட்டக்கத்தியுடன் போலீசாரை துரத்திய அந்த போதை ஆசாமியை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அட்டக்கத்தியுடன் போலீசாரை ஓட ஓட துரத்திய போதை ஆசாமி!

போலீசாரை துரத்திய அந்த போதை ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Visakhapatnam:

விசாகப்பட்டினத்தில் உள்ள உடா குழந்தைகள் அரங்கத்தில், போதை ஆசாமி ஒருவர் அட்டக்கத்தியுடன் போலீசாரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக த்ரி டவுண் காவல் ஆய்வாளர் ராமாராவ் கூறும்போது, அந்த திரையரங்க செக்யூரிட்டியிடம் புகார் அழைப்பு வந்ததன் பேரில் போலீசார் உடா குழந்தைகள் திரையரங்கத்திற்கு சென்றனர். அங்கு செக்யூரிட்டிகளுடன் ஒருவர் சண்டையிட்டு கொண்டிருந்துள்ளார். 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததை அறிந்த அந்த நபர் தன்வசம் இருந்த அட்டக்கத்தியை வைத்து போலீசாரை ஓட ஓட துரத்திச் சென்றுள்ளார். இதையடுத்து, லாவகமாக செயல்பட்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். 

இதன் பின்னரே, அந்த ஆசாமி போதையில் இருந்ததும், அவர் கையில் இருந்தது அட்டக்கத்தி என்பதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

More News