கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது

ட்ரோன் விபத்தின் போது பாக்கு மரத் தோட்டத்தில் பெரிய சத்தம் கேட்டு ஜோடி சில்லேநஹள்ளி கிராம மக்கள் பயத்தில் உறைந்து விட்டனர்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

Bengaluru:

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

ட்ரோன் விபத்தின் போது பாக்கு மரத் தோட்டத்தில் பெரிய சத்தம் கேட்டு ஜோடி சில்லேநஹள்ளி கிராம மக்கள் பயத்தில் உறைந்து விட்டனர்

விரைவில் ஏராளமான மக்கள் விபத்து நடந்த இடத்தில் கூடிவிட்டனர். இந்த சம்பவத்தை உறுதி படுத்தி காவல் கண்காணிப்பாளர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.  

உடைந்த விமானத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. 

இந்த சம்பவம் வான்வழி சோதனை செய்யப்பட்டபோது நடந்ததாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தன.