This Article is From Oct 14, 2019

Xi Jinping-PM Narendra Modi Summit: டிராகன்,யானை நடனம்தான் சீனா, இந்தியாவிற்குமான சரியான தேர்வாக இருக்கும்

"டிராகன் மற்றும் யானை நடனத்தை அடைவது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ஒரே சரியான தேர்வாகும், இது இரு நாடுகளின் மற்றும் அவர்களின் மக்களின் அடிப்படை நலன்களுக்காக உள்ளது" என்று ஜனாதிபதி ஜி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Xi Jinping-PM Narendra Modi Summit: டிராகன்,யானை நடனம்தான் சீனா, இந்தியாவிற்குமான சரியான தேர்வாக இருக்கும்

பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை பலவிதமான விவகாரங்களை பேசியுள்ளனர்

ஹைலைட்ஸ்

  • Chinese President and PM Modi held informal talks for two days
  • China and India should be good neighbours, good partners: President Xi
  • Since Friday, the two leaders had spent over 5 hours in one-on-one talks
New Delhi:

இந்தியாவும் சீனாவும் “ஒருவருக்கொருவர் வளர்ச்சியைப் பற்றி சரியான பார்வையின் மூலம் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் சனிக்கிழமை தெரிவித்தார். 

"எந்தவொரு கண்ணோட்டத்திலிருந்தும், சீனாவும் இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாகவும் நல்லுறவுகளாகவும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கைகோர்த்து முன்னேற வேண்டும்" என்று அவர் இரண்டு நாள் இந்தியா பயணத்திலிருந்து திரும்பி வந்த பின்னர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை பலவிதமான விவகாரங்களை பேசியுள்ளனர்

"டிராகன் மற்றும் யானை நடனத்தை அடைவது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ஒரே சரியான தேர்வாகும், இது இரு நாடுகளின் மற்றும் அவர்களின் மக்களின் அடிப்படை நலன்களுக்காக உள்ளது" என்று அதிபர் ஜி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

j2g8va0o

இரு நாடுகளும் நட்பு மூலம் ஒத்துழைப்பை வழங்கவேண்டும். சீனா தன்னை நன்கு வளர்த்துக் கொள்ளும் என்று நம்புகிறது. இந்தியாவும் நன்றாக உள்ளது. சீனாவும் இந்தியாவும் பரஸ்பர சாதனைகளை செய்து ஒருவருக்கொருவர் ஒளிர வேண்டும்" என்று ஜனாதிபதி ஜி அறிக்கையில் கூறினார்.

வெள்ளிக்கிழமை முதல், ஜனாதிபதி ஜி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக உரையாடலில் செலவிட்டனர். தூதுக்குழு அளவிலான சந்திப்புக்கான தனது தொடக்க உரையில், ஜனாதிபதி ஜி, முறைசாரா உச்சி மாநாடு ஒரு "புத்திசாலித்தனமான முடிவு" என்றும், "உங்களுடன் (பிரதமர் மோடி) ஆழ்ந்த முறையில் மேலும் கலந்துரையாடல்கள் மூலம் மேலதிக திட்டங்களை மேற்கொள்வதற்கும் தான் எதிர்நோக்குவதாக" தெரிவித்தார்.

.