This Article is From Apr 02, 2020

கொரோனா பரவலை மத பிரச்சனையாக உட்படுத்த வேண்டாம்: தமிழக பாஜக தலைவர்

டெல்லி நிஜாமுதீனில்‌ நடைபெற்ற தப்லீக்‌ ஜமாத்‌ மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சென்றிருந்த சுமார்‌ ஆயிரத்திற்கு மேற்பட்டோர்‌ தமிழகம்‌ திரும்பி இருப்பதாக தெரியவருகிறது.

கொரோனா பரவலை மத பிரச்சனையாக உட்படுத்த வேண்டாம்: தமிழக பாஜக தலைவர்

அரசியல்‌ மத பிரச்சினைகளை யாரும்‌ உட்படுத்த வேண்டாம்‌ - எல்.முருகன்

ஹைலைட்ஸ்

  • கொரோனா பரவலை மத பிரச்சனையாக உட்படுத்த வேண்டாம்
  • அரசு ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
  • கொரோனாவுக்கும்‌ இடையே ஒரு பெரிய போர்‌ நடந்து வருவதைப்போல நாடே அதிர்ச்சி

கொரோனா வைரஸ் பரவலை அரசியல், மத பிரச்சினைகளாக யாரும் உட்படுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி நிஜாமுதீனில் கடந்த மாத தொடக்கத்தில் நடந்த பெரும் மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 128 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 7 பேர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளனர். 

கடந்த மார்ச் 8-10 தேதிகளில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான "நிஜாமுதீன் மர்காஸில்" ஒரு நிகழ்ச்சிக்காகக் கூடியுள்ளனர். இதில் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், நிஜாமுதீன் தலைமையகத்தில் தங்கியுள்ளனர். பின்னர், பல்வேறு இந்தியர்களும், வெளிநாட்டவர்களும் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால், நாடு முழுவதும் இவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, கொரோனா பரவுவதற்கான சாத்தியங்களுடன் நாடு முழுவதும் பரவியிருக்கும் தப்லீக் ஜமாத்தின் உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல்‌ தெரிவிக்க வேண்டும்‌ என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை அரசியல், மத பிரச்சினைகளாக யாரும் உட்படுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில்‌ கொரோனாவின்‌ பரவலைத்‌ தடுத்திட மத்திய மாநில அரசுகள்‌ ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழக அரசு துரித கதியில்‌ இயங்கி வருகிறது. இந்தியாவுக்கும்‌ கொரோனாவுக்கும்‌ இடையே ஒரு பெரிய போர்‌ நடந்து வருவதைப்போல நாடே அதிர்ச்சியில்‌ ஆழ்ந்துள்ளது. கொரோனாவை வீழ்த்திட முதல்‌ நடவடிக்கை அவரவர்‌ வீடுகளில்‌ தனித்திருத்தல்‌ தான்‌. இதை நாம்‌ கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்‌.

இந்த நிலையில்‌ டெல்லி நிஜாமுதீனில்‌ நடைபெற்ற தப்லீக்‌ ஜமாத்‌ மாநாட்டிற்குத் தமிழகத்திலிருந்து சென்றிருந்த சுமார்‌ ஆயிரத்திற்கு மேற்பட்டோர்‌ தமிழகம்‌ திரும்பி இருப்பதாகத் தெரியவருகிறது. தமிழக அரசின்‌ இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின்‌ நலன்‌ கருதி இந்த மாநாட்டுக்குச்‌ சென்று வந்தவர்கள்‌, அவர்தம்‌ குடும்பத்தினர்‌ அவருடன்‌ நெருங்கிய தொடர்பில்‌ இருப்பவர்கள்‌ தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில்‌ சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்‌ என வேண்டுகோள்‌ விடுக்கிறேன்‌. 

மாநில அரசும்‌ மக்கள்‌ நலன்‌ கருதி இவர்கள்‌ அனைவரையும்‌ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்‌ என்றும்‌, இதில்‌ அரசியல்‌ மத பிரச்சினைகளை யாரும்‌ உட்படுத்த வேண்டாம்‌ என்று வேண்டுகோள்‌ விடுக்கிறேன்‌. பிரச்சினையின்‌ ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள்‌ அரசின்‌ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள்‌ என்று நம்புகிறேன்‌ என்று அவர் தெரிவித்துள்ளார்.

.