“கிட்னிக்கு இதயத்தில் ஓர் இடமுண்டு…”- அதிபர் ட்ரம்ப் சொன்ன ‘ஆஹா’ கருத்து

இதைப் பார்த்த இணையவாசிகள், ட்ரம்பை ட்ரோல் செய்ய அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை

 Share
EMAIL
PRINT
COMMENTS
“கிட்னிக்கு இதயத்தில் ஓர் இடமுண்டு…”- அதிபர் ட்ரம்ப் சொன்ன ‘ஆஹா’ கருத்து

கிட்னி என்று சொல்லப்படும் சிறுநீரகத்துக்கென்று வரும் நோய்களை சரி செய்ய பல சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது அமெரிக்க அரசு


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சொன்ன பல கருத்துகள் (அனைத்து கருத்துகளும் கூட), வெற லெவலில் இருக்கும். சில நேரங்களில் சிலர் பேசுவது சர்ச்சையாக இருக்குமென்றால், ட்ரம்ப் எதைப் பேசினாலும் சர்ச்சையாகும். அப்படி அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, “கிட்னிக்கு இதயத்தில் ஓர் ஸ்பெஷல் இடமுண்டு” என்றார். கிட்னி என்று சொல்லப்படும் சிறுநீரகத்துக்கென்று வரும் நோய்களை சரி செய்ய பல சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது அமெரிக்க அரசு. அது குறித்த நிகழ்ச்சியில் பேசும்போதுதான் ட்ரம்ப், இப்படி பிதற்றியுள்ளார். 

“சில விஷயங்களுக்காக நீங்கள் அதிகம் மெனக்கெடுவீர்கள். கிட்னிக்காக அதிகம் உழைப்பீர்கள். அது மிகவும் ஸ்பெஷலானது. கிட்னிக்கு இதயத்தில் ஒரு ஸ்பெஷல் இடமுண்டு” என்று நிகழ்ச்சியில் பேசியுள்ளார் ட்ரம்ப்.

கீழே அந்த வீடியோவைப் பாருங்கள்:

இதைப் பார்த்த இணையவாசிகள், ட்ரம்பை ட்ரோல் செய்ய அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் ட்ரம்பை கேலி செய்யும் வகையில், “கிட்னிக்கு இதயத்தில் இடமில்லை ட்ரம்ப். அது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேள்வியெழுப்பியுள்ளனர். 

அப்படியும் சிலர், ட்ரம்புக்கு முட்டுக் கொடுத்தனர். “சில விஷயங்களுக்கு இதயத்தில் ஸ்பெஷல் இடம் இருக்கும் என்பதைத்தான் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதை புரிந்து கொள்ளாமல், தேவையற்ற விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்” என்று ட்ரம்ப் ஆதரவாளர்களும் ட்வீட்டியுள்ளனர். 

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம், அதிபர் ட்ரம்ப்பின் மனைவி, மெலேனியா, கிட்னி பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர்தான், இயல்பு நிலைக்கு மெலேனியா திரும்பினார்.

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................