This Article is From Mar 27, 2020

கொரோனா வைரஸைப் பற்றி சீன அதிபர் ஜின்பிங்குடன் விவாதிக்கும் டொனால்ட் டிரம்ப்

82,404 தொற்று நோயாளர்களுடன், அமெரிக்கா இப்போது சீனா மற்றும் இத்தாலியை விஞ்சிவிட்டது

கொரோனா வைரஸைப் பற்றி சீன அதிபர் ஜின்பிங்குடன் விவாதிக்கும் டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப், மற்றும் ஜி ஜின்பிங்கும் உலகளாவிய தொற்றுநோய் பற்றி விவாதிக்கப் போவதாகக் கூறினார் (கோப்பு)

Washington:

சர்வதேச அளவில் கோரோன அளப்பரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதையடுத்து அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொலைப்பேசியில் பேச இருக்கிறார். ஏனெனில் தற்போது அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அதிக அளவில் கொண்ட நாடாக விளங்குகிறது.

இரவு 9:00 மணிக்கு (0100 GMT வெள்ளிக்கிழமை) ஷியுடன் பேசப்போவதாக செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப் கூறினார்.

82,404 தொற்று நோயாளர்களுடன், அமெரிக்கா இப்போது சீனா மற்றும் இத்தாலியை விஞ்சிவிட்டது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், "சீனாவில் எண்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாது" என்று டிரம்ப் இது குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

சீன அதிபரோடு உலகளாவிய தொற்றுநோயைப் பற்றி விவாதிக்கப் போவதாகக் கூறிய டிரம்ப், தங்களுக்கு "நல்ல உறவு" இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். COVID-19 ஐ "சீன வைரஸ்" என்று ட்ரம்ப் பலமுறை அழைத்தாலும், இது சீனாவில் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் இனம் ரீதியான குற்றச்சாட்டுகளைத் தூண்டியுள்ளது.

அமெரிக்க படையினர் இந்த வைரஸை சீனாவிற்கு கொண்டு வந்ததாக ஒரு குற்றச்சாட்டை சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி குறிப்பிட்டதால்தான், தான் இவ்வாறாகக் குறிப்பிடுவதாக டிரம்ப் கூறுகிறார்.

"இது சீனாவிலிருந்து வந்தது" என்று அவர் வியாழக்கிழமை அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், "அவர்கள் இதைப் பற்றி மிகவும் வலுவாக உணர்ந்தால், நாங்கள் இது குறித்து கவணத்தில் கொள்வோம்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள வெகுஜன சமூக தொலைதூர உத்திகளின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றைத் தவிர, டிரம்பும் ஷியும் உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கிடையில் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் திட்டங்களைப் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது.

நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் "ட்ரம்ப் தாக்கப்படுகிறாரா என்பதை பார்க்க" ஷி "காத்திருக்க விரும்புவார்" என்று டிரம்ப் தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.