'அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது' - ட்ரம்ப் ஒப்புதல்

உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு ஹெல்சின்கியில் நடைபெற்றது

 Share
EMAIL
PRINT
COMMENTS
'அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது' - ட்ரம்ப் ஒப்புதல்
Washington: 

வாஷிங்டன்: உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு ஹெல்சின்கியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த இரு நாட்டு தலைவர்களும், பல முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இன்றும் ரஷ்யா தலையிடுகிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'இல்லை' என்று ட்ரம்ப் பதிலளித்தார். ஆனால், ரஷ்யா தலையிடவில்லை என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளதை வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார். செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டதனால், அதற்கு 'இல்லை' என்று அதிபர் ட்ரம்ப் பதிலளித்ததாகவும், ரஷ்யா குறித்த கேள்விக்கு 'இல்லை' என்று பதிலளிக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கத் தேர்தலுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது, அதைத் தடுக்கப் போதுமான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப் அளித்த பதிலை, அவரது சொந்த கட்சியினரே விமர்சனம் செய்துள்ளனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாட்டு தலைவர்களுடனும் மொழிபெயர்ப்பாளர் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளை சோதனை செய்தால், இந்தச் சந்திப்பு குறித்த விவரங்கள் தெரியவரும் என்று குடியரசு கட்சியினர் கருதுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனினும், இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு குறித்து மொழிபெயர்ப்பாளரைக் கட்டாயப்படுத்தி தகவல்கள் பெறக்கூடாது என்று வெள்ளை மாளிகையில் கருத்துகள் வெளியாகியுள்ளன.

மேலும், 2016ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலின்போது, ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க விசாரணை அமைப்பின் முடிவைத் தான் ஏற்றுக்கொள்வதாக ட்ரம்ப் தெரிவித்தார். அப்போது, wouldn't  என்ற வார்த்தைக்கு would என்று மாற்றி பயன்படுத்தியதால், பொருள் மாறியது என்று விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ட்ரம்ப் தெரிவித்தார். எனினும், ட்ரம்ப் கூறிய கருத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால்தான், தன் கருத்தை மாற்றிக் கூறினார் என்று பலரும் கருதுகின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................