This Article is From Jun 21, 2019

‘ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த சொல்லி, வேண்டாம்னுட்டாரு..!’- அமெரிக்க அதிகாரிகள்

ஈரான் தரப்பு, அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், “மிகப் பெரிய தவறை ஈரான் செய்துவிட்டது” என்று எச்சரிக்கை விடுத்தார்

‘ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த சொல்லி, வேண்டாம்னுட்டாரு..!’- அமெரிக்க அதிகாரிகள்

ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது குறித்து நியூயார்க் டைம்ஸ் இதழ்தான் முதலாவதாக செய்தி வெளியிட்டது. 

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தொடர்ந்து பனிப் போர் நடந்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்த சொல்லி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டதாகவும், பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டதாகவும் அமெரிக்க அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து நம்மிடம் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் பேசுகையில், “ஈரானில் இருக்கும் இஸ்லாமிக் ரிவல்யூஷ்னரி கார்டு குழுக்கு எதிராக தாக்குதல் நடத்த அதிபர் உத்தரவிட்டார். எங்களின் ட்ரோன் ஒன்றை ஈரான் தரப்பு சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்த முடிவை அதிபர் எடுத்தார். ஆனால், தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தனது முடிவினை அவர் மாற்றிக் கொண்டார்” என்று கூறினார்கள்.

ஈரான் தரப்பு, அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், “மிகப் பெரிய தவறை ஈரான் செய்துவிட்டது” என்று எச்சரிக்கை விடுத்தார். ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது குறித்து நியூயார்க் டைம்ஸ் இதழ்தான் முதலாவதாக செய்தி வெளியிட்டது. 

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நிலவி வருவதால், இரு நாட்டுக்கும் இடையில் போர் வெடிக்க வாய்ப்புள்ளதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஈரான் தரப்பு மீது அமெரிக்கா தாக்குலதல் நடத்தியிருந்தால், நிலைமை மோசமாக மாறியிருக்கும். 

ட்ரோனை சுட்டு வீழ்த்தியது குறித்து ஈரான் தரப்பு, “எங்கள் வான் எல்லையை ஊடுருவியதால்தான் அது சுட்டு வீழ்த்தப்பட்டது” என்று விளக்கம் கொடுத்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த அமெரிக்கா, “தேவையில்லாத தாக்குல் இது” என்று உஷ்ணமானது. 

இது குறித்து விரிவாக பேசிய டொனால்டு ட்ரம்ப், “நமது நாட்டின் ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொறுத்திருந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

.