This Article is From Feb 25, 2020

இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு பிரச்சனையில் உள்ளது. இரு நாட்டு பிரதமர்களுடனும் எனக்கு நல்ல உறவு உள்ளது. அதனால் என்னால், மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. (File)

New Delhi:

அமெரிக்காவின் மத்தியஸ்த கோரிக்கையை இந்தியா பலமுறை நிராகரித்த நிலையிலும், மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார். 

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு பிரச்சனையில் உள்ளது. இரு நாட்டு பிரதமர்களுடனும் எனக்கு நல்ல உறவு உள்ளது. அதனால் என்னால், மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் இருந்து எழும் பயங்கரவாதம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பின் போது இந்த கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் குறித்து இன்று விரிவாக பேசப்பட்டதாக அவர் கூறினார். 

அது ஒரு பிரச்சினை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாகிஸ்தான் இந்த விஷயத்தில் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன்.

காஷ்மீர் நீண்ட காலமாக ஏராளமான மக்களின் பார்வையில் ஒரு முள்ளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு கதைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. பயங்கரவாதத்தைப் பற்றி இன்று விவாதித்தோம்" என்று டிரம்ப் கூறினார். 

ஒவ்வொரு விஷயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கும். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ட்ரம்ப் ஏற்கனவே இவ்வாறு குறைந்தது 2 முறையாவது கூறியிருப்பார். 
 

.