வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்குப் பிறகு ட்ரம்ப் - கிம் கூட்டறிக்கை!

டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரு நாட்டுக்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் இன்று சிங்கப்பூரில் சந்தித்தனர்

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்குப் பிறகு ட்ரம்ப் - கிம் கூட்டறிக்கை!

இன்று ட்ரம்ப்- கிம் சிங்கப்பூரில் சந்தித்தனர்

ஹைலைட்ஸ்

  • இரு நாட்டுத் தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்தனர்
  • அணு ஆயுதத்தை முழுவதுமாக கைவிட வட கொரியா கைவிடுவதாக அறிவிப்பு
  • கொரிய தீபகற்பத்தில் சீக்கிரமே சுமூக தீர்வு எட்டும் என நம்பப்படுகிறது
Singapore:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரு நாட்டுக்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் இன்று சிங்கப்பூரில் சந்தித்தனர். இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒரு சுமூக தீர்வுக்கு வந்தனர். இதையடுத்து, கூட்டறிக்கையை வெளியிட்டனர் ட்ரம்ப் - கிம்.

வட கொரியாவின் அதீத அணு ஆயுத சோதனை செயல்பாடுகளால் கோபம் கொண்ட அமெரிக்கா, பல ஆண்டுகளாக அந்நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தது. இந்நிலையில், இன்று இரு நாட்டுத் தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்து அமைதி நோக்கி திரும்ப பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது, கூட்டறிக்கையில் கூன்றியிருப்பதாவது:

1. அமெரிக்கா மற்றும் வட கொரியா, தங்கள் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. இந்த உறவு என்பது இரு நாட்டுடைய மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைதியானதாகவும் சுமூகமானதாகவும் இருக்கும்.

2. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மற்றும் வட கொரியா அனைத்து நடவடிக்கைகளையும் சீக்கிரமே எடுக்கும். 

3. ஏப்ரல் மாதம் 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட பன்முன்ஜோம் பிரகடனத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், வட கொரியா அணு ஆயுதங்களை முழுவதுமாக கைவிட நடவடிக்கை எடுக்கும். 

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது அமெரிக்க - கொரிய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படகிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் தாங்கள் ஒப்புக் கொண்டதை நிறைவேற்றுவதை உறுதி செய்ய இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சீக்கிரமே சந்திப்பர். 

சில நாட்களுக்கு முன்னர் வரை அமெரிக்கா - வட கொரியா இடையில் கருத்து மோதல் நிலவி வந்தது. அதனால், இந்த சந்திப்பு நடக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. 

Newsbeep