This Article is From Feb 25, 2020

டிரம்பை ஆரத்தழுவிய மோடி, டிரம்ப் ராட்டையை சுற்றிய புகைப்படங்கள்!!

டிரம்பை ஆரத்தழுவிய மோடி, டிரம்ப் ராட்டையை சுற்றிய புகைப்படங்கள்!!

டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் இன்று காலை இந்தியா வந்தடைந்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், அவரது மனைவி மெலனியா டிரம்பும் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை இந்தியா வந்தடைந்தனர். இதில், டிரம்பின் மகள் இவங்கா டிரம்பும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் விமானத்தில் இருந்து முதலில் வெளிவந்தனர். பின்தொடர்ந்து, வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியாவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார். "பீஸ்ட்" என்று அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் கருப்பு நிற காரில் பிரதமர் மோடி டிரம்ப்களை அழைத்துச் சென்றபோது, வண்ணமையமான ஆடைகளில் நடனக் கலைஞர்கள் ஆடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தி உற்சாகமாக வரவேற்றனர். 

அகமதாபாத் வருகை தந்த டிரம்ப், மெலனியா டிரம்பின் சிறந்த புகைப்படங்கள்: 

7a56vpe8

இந்தியா வந்தடைந்த டிரம்ப், மெலனியா டிரம்ப்.

அமெரிக்க அதிபருக்கான ஏர் ஃபோர்ஸ் ஒன் தனி விமானத்தில் வந்தடைந்த டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

ht6o0sm8

டிரம்பை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி.

இந்திய பயணத்துக்காக நேற்று இரவு வாஷிங்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி எனது நண்பர். இந்திய மக்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்'' என்று கூறினார்.
 

la5g3ilk

சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுற்றிய டிரம்ப், மெலனியா டிரம்ப்.

fjaca05

சபர்மதி ஆசிரமத்தில் பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்ட டிரம்ப்.

eq7kjp9o

அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்க கூடியிருந்த பொதுமக்கள்.

.