இந்தியாவில் 2வது நாளாக டிரம்ப்: பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது!

Donald trump India visit Live: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.

இந்தியாவில் 2வது நாளாக டிரம்ப்: பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது!

Donald Trump in India: முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இந்தியா வருகை தந்தார்.

New Delhi:

இரண்டுநாள் பயணமாக இந்தியா வருகை வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு முதலில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைப் பிரதமர் மோடி சுற்றிக் காட்டி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மோடியைப் புகழ்ந்து பேசினார். பின்னர் மாலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்வையிட்டனர்.

2வது நாளாக டிரம்பின் இந்திய பயணம் குறித்த நேரடி தகவல்கள்:

Feb 25, 2020 12:22 (IST)



டெல்லியில் பள்ளி மாணவர்களுடன் உரையாடும் மெலனியா டிரம்ப்! 

டெல்லி சர்வோதயா சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர்களுடன் மெலனியா டிரம்ப் உரையாடுகிறார்.

Feb 25, 2020 12:16 (IST)


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் மாணவர்களுடன் "மகிழ்ச்சி வகுப்பு" அமர்வில் கலந்து கொண்டார். மெலானியாவுக்கு மாணவர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 


Feb 25, 2020 12:08 (IST)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்புடன் ஹைதராபாத் இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி இருநாட்டு வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 
Feb 25, 2020 11:51 (IST)
Feb 25, 2020 11:34 (IST)


 ஹைதராபாத் இல்லத்தில் டிரம்ப், மெலனியாவை வரவேற்றார் பிரதமர் மோடி 

Feb 25, 2020 11:26 (IST)


பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக டெல்லியின் சின்னமான ஹைதராபாத் மாளிகை அனைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கட்டிடம் முழுவதும் இந்தியா மற்றும் அமெரிக்கா கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பும் இடம்பெறும் என்று தெரிகிறது. 
Feb 25, 2020 11:04 (IST)
டிரம்பு, மெலனியா டிரம்ப் பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். 



Feb 25, 2020 11:02 (IST)
காந்தி நினைவிடத்தில் மரக்கன்று நட்டார் டிரம்ப்
Feb 25, 2020 10:55 (IST)
Feb 25, 2020 10:53 (IST)
Feb 25, 2020 10:41 (IST)

ஹைதராபாத் மாளிகை வந்தடைந்தார் பிரதமர் மோடி, இன்னும் சற்றுநேரத்தில் டிரம்பை சந்திக்கிறார்.
Feb 25, 2020 10:27 (IST)
Listen to the latest songs, only on JioSaavn.com