This Article is From Oct 31, 2018

"வெளிநாட்டவருக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் குடியுரிமை கிடையாது"

தற்போது உள்ள சட்டத்தின் படி ''எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் குழந்தை அமெரிக்காவில் பிறந்தால் அந்த் குழந்தைகல் அமெரிக்கர்களே'

" மற்ற நாட்டில் இருந்து இருந்து வந்து வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்"

ஹைலைட்ஸ்

  • "இங்குப் பிறக்கும் அனைவருக்கும் பிறப்புரிமைக் கொடுப்பது ஏற்புடையது இல்லை"
  • எந்த அதிபரும் அரசியகமைப்பை மாற்ற முடியாது: தலைமைக் குடியுரிமை ஆணையர்
  • நூற்றாண்டு காலமாக இந்த திட்டங்களை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கிறது
Washington:

மற்ற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கொடுப்பது அபத்தமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது அந்நாட்டில் வசிக்கும் மற்ற நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் கொண்டுவரவிருக்கும் இந்த மாற்றத்துக்கு அவரின் கட்சியினரிடமும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. 

அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ட்ரம்ப் 

'ஆக்சியாஸ் ஆன் ஹெச்பிஓ' (Axion on HBO) தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், " மற்ற நாட்டில் இருந்து இருந்து வந்து வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் செய்தி தொடர்பாளர் பால் ரியான், " அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புரிமையை ரத்து செய்வது சரியான முடிவல்ல" என்று கூறியுள்ளார்.

மேலும் "முன்னாள் அதிபர் ஒபாமா எக்ஸிக்யூடிவ் நடவடிக்கை மூலம் குடியேற்ற சட்டங்களை மாற்ற முயன்றபோதே நாங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. நாங்கள் நாட்டின் அரசியலமைப்பை நம்புகிறோம்" என்று ரியான் கெண்டக்கியில் உள்ள வாணொலி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

தற்போது உள்ள சட்டத்தின் படி ''எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் குழந்தை அமெரிக்காவில் பிறந்தால் அந்த் குழந்தைகள் அமெரிக்கர்களே'' என்று தான் உள்ளது. 

ட்ரம்ப் ஆக்சியாஸ் ஆன் ஹெச்பிஓக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி ஒளிபரப்பப்பட்டது. அதில் அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது அபத்தமானது என்று ட்ரம்ப் கூறினார். இதன் முழுப்பகுதி வரும் ஞாயிறன்று வெளியாகவுள்ளது. 

உலகிலேயே அமெரிக்காவில் மட்டும் தான், இதுபோன்ற அபத்தமான நடைமுறை அமலில் இருப்பதாக தெரிவித்தார். 85 ஆண்டுகளாக இருக்கும் இந்த திட்டத்தை ரத்து செய்வது குறித்து, வெள்ளை மாளிகை வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

இது சர்ச்சைக்குரிய சட்ட சீர்திருத்தமாக இருக்கப்போகிறது. சட்ட ரீதியான சவால்களை ட்ரம்ப் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

குடியரசு கட்சியை சேர்ந்த சக் கிராஸ்லே பேசும்போது '' குடியுரிமையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.

14வது அமெரிக்க சட்டத்திருத்த மசோதாவின் படி ''ஒருசில காரனங்கல் தவிர அமெரிக்காவில் பிறக்கும் அனைவருமே அமெரிக்கர்கள்தான் என்று அமெரிக்க குடியுரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதன் மூலம் குடியுரிமை சிக்கல் தீர்ந்துவிடாது. மேலும் ஒற்றை கையெழுத்தால் எந்த அதிபராலும் மாற்றிவிட முடியாது. சட்ட சீர்திருத்தங்கள் மூலமாக தான் இது சாத்தியம் என்று அமெரிக்க குடியுரிமை ஆணையம்  இயக்குநர் பெத் வெர்லின் கூறியுள்ளார்.

ப்ரைட்பார்ட் வெளியிட்டுள்ள செய்தியில் ''ட்ரம்பின் முடிவு சரியானது. சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெறுவதை ஏற்க முடியாது. இதனை காரணம் காட்டி பலர் அமெரிக்க குடியுரிமை பெற முயற்சிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும் குடியுரிமை சட்ட மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்பதில் அதிபர் உறுதியாக உள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த தலைவரான நான்சி பெலோசி ட்ரம்ப்பின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிபருக்கு சட்டத்தை முழுமையாக அழிக்கும் அதிகாரமில்லை. ஆனால் அவர் இரண்டு ஆண்டுகளாக இதனை நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கிறார் என்றும், மக்கல் நலனில் அக்கறையற்ற அதிபராக உள்ளார் என்றும் விமர்சித்துள்ளார். 

.