கனமழைக்கு ஒதுங்கிய நாயை கண்மூடித்தனமாக தாக்கிய கொடூரம்- மும்பையில் வெடித்த போராட்டம்!

தாக்கப்பட்ட நாயின் பெயர் ‘லக்கி’ என்றும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அது சிகிச்சை பெற்று வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

லக்கியின் மருத்துவ செலவுக்கும் பலர் நன்கொடை கொடுத்து வருகின்றனர்.


Mumbai: 

மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்த போது, தெரு நாய் ஒன்று அங்கிருந்த அடுக்குமாடி கட்டடத்தில் ஒதுங்கியுள்ளது. கனமழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் தெரு நாயை அங்கிருந்து அடித்துத் துரத்தியுள்ளனர் கட்டடவாசிகள். இந்த சம்பவம் சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவானது. பலராலும் சமூக வலைதளங்களில் கண்டிக்கப்பட்ட இந்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

மும்பையில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளனர். 

மும்பையின் வோர்லியில் உள்ள டர்ஃப் வியூ கட்டடத்தில்தான் இந்த சம்பவம் கடந்த 24 ஆம் தேதி நடந்துள்ளது. அன்று கனமழை பெய்து கொண்டிருக்கும்போது செய்வதறியாது ஒரு தெரு நாய், கட்டடத்துக்குள் அடைக்களம் தேடப் பார்த்துள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பாக்காக இருந்த இருவர் நாயை சரமாரியாக தாக்கினர். கட்டடத்தில் வசித்த நபர் சொல்லித்தான் செக்யூரிட்டிக்கு இருந்த நபர்கள் நாயை தாக்கியதாக சொல்லப்படுகிறது. 

தாக்கப்பட்ட நாயின் பெயர் ‘லக்கி' என்றும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அது சிகிச்சை பெற்று வருகிறது என்றும் தெரியவந்துள்ளது. லக்கி சீக்கிரமாக குணமாக பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். லக்கியின் மருத்துவ செலவுக்கும் பலர் நன்கொடை கொடுத்து வருகின்றனர். ‘பாம்பே அனிமல் ரைட்ஸ்' என்கிற குழு, டர்ஃப் வியூ கட்டடம் முன்பு போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

q20g4ko8

லக்கி தாக்கப்பட்ட இடத்துகுக எதிராக போராட்டம் செய்யும் மும்பைவாசிகள்.

லக்கிக்கு மருத்துவ உதவிகளை செய்து வரும் அந்த குழு, “காயத்தைத் தொடும் போதெல்லாம் லக்கி வலியால் கத்துகிறான். மிகவும் இளைத்துப் போய் வலுவிழந்து இருக்கிறான் லக்கி. உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருப்பதனால், தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவன் கொஞ்சம் தேறிவந்துவிட்டாலும் தொடர்ந்து போரட்ட நிலையில்தான் இருக்கிறான்” என்று முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டது. 

பாலிவுட் நடிகையான ஆலியா பட், “இதைப் போன்ற சம்பவம் நெஞ்சை உருகச் செய்கிறது. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு இது குறித்து நாம்தான் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். மழை பெய்தால் தெருவில் இருக்கும் விலங்குகள் நம் வீட்டில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும்” என்று ட்விட்டர் மூலம் கூறி பீட்டா அமைப்பையும் டேக் செய்துள்ளார். 

அதேபோல சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே, “வோர்லியில் நாய்க்கு நடந்த சம்பவம் என்பது சோகமானது மட்டுமல்ல தொந்தரவு செய்யக்கூடியதும் ஆகும். மழைக்கு ஒதுங்கும் ஒரு உயிரினத்துக்கு இப்படியொரு சம்பவம் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமாக நபருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................