This Article is From Jul 20, 2019

கழிவு நீர்க் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்!!

சிசிடிவி காட்சிகள் மூலமாக குழந்தையை வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கழிவு நீர்க் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்!!

அரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chandigarh:

கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை நாய் ஒன்று மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று வீசப்பட்டிருந்தது. இதனை பார்த்த நாய் ஒன்று கடுமையாக குலைத்து ஊரைக் கூட்டியது.

இதன்பின்னர் பொதுமக்கள் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தை 1.15 கிலோ எடை கொண்ட பெண் சிசு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தூக்கி வீசப்பட்டதில் குழந்தையின் தலையில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது முழு கவனத்துடன் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கால்வாய் அருகேயிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கி வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.