This Article is From Feb 01, 2019

போட்டி தேர்வுகளில் நெகட்டிவ் மதிப்பெண்களை கணக்கிடக்கூடாது: உயர்நீதிமன்றம்

எந்தப் போட்டி தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டி தேர்வுகளில் நெகட்டிவ் மதிப்பெண்களை கணக்கிடக்கூடாது: உயர்நீதிமன்றம்

கடந்த 2013ஆம் ஆண்டில் நெல்சன் பிரபாகரன் என்பவர் ஐஐடி பிரதான தேர்வு எழுதியுள்ளார். அப்போது, மொத்தம் 72 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், அவருக்கு நெகட்டிவ் மதிப்பெண் என்ற அடிப்படை 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டது. அதனால், 47 மதிப்பெண்கள் மட்டும் அவர் பெற்றார். அட்வான்ஸ் தேர்வுக்கு நுழைய 50 மதிப்பெண்கள் தேவைப்பட்ட நிலையில், மதிப்பெண் குறைவாக உள்ளதாக கூறி அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நெகட்டிவ் மதிப்பெண்ணால், ஐஐடி அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி நெல்சன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கனடா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலுள்ள தேர்வுகளில் கூட நெகட்டிவ் மார்க் இல்லை என்று தம்முடைய மனுதாரர் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், எந்தப் போட்டி தேர்விலும் நெகட்டிவ் மார்க் கணக்கிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

.